January 16, 2010

ஒரு மழை நாளில்


ஒரு மழை நாளில்
உனக்கான என் நினைவுகளைப் பத்திரப்படுத்தி
வீட்டுத் திண்ணையில் இருந்தேன்..
எங்கிருந்தோ ஒரு வாசனை
வந்து என் நாசியை நிறைத்தது..
'டேய்.. மழை வரப் போவுதுடா' என்று
வாசலுக்கு சிறுவர்களும்..
துணிகளை எடுக்க ஓடும் பெண்மணிகளும்..
'நனைஞ்சா சளி பிடிக்கும்' என்று
அதட்டும் பெற்றோரும்..
காலையில் எழுதிய கோலம்
அழிந்து போகுமுன்
அழகு பார்த்த பெணகளும்..
பிரித்த குடை நான்கு திசைகளிலும்
நீட்டிக் கொண்டு நிற்கும் எரிச்சலில்
'குடை ரிப்பேர் வரும்போது பார்க்கிறதில்லையா' அதட்டலும்..
'கோவில் புஷ்கரணியில் ஜலம் வந்திருமில்ல' என்று
எதிர் வீட்டு பாட்டியும்..
தெரியாமல் விரல் நீட்டி
மழை நீர் பிடித்து
முகத்தில் அடித்து விளையாடும்
புது மணப் பெண்ணும்..
'வாடகை வாங்க வரப்ப ஒழுகுதுன்னு சொல்லணும்'
என்று கவலையுறும் குடும்பத்தலைவியும்..
'எங்கே மழையில மாட்டிக்கப் போறாரோ' என்று
ஏங்கும் மனைவியும்..
சற்றே என்னை உன்னிலிருந்து பிரித்து
கொட்டும் மழையை சில நிமிடங்கள் ரசிக்க வைத்தன..
ஆனாலும் பெண்ணே..
இந்த மழையில் என்னுடன் நீ
ஒரே குடையின் கீழ் வந்தால்..
எப்படியிருக்கும்.. என்ற ஏக்கம்தான்
இன்னும் அதிகமாய்
உன் நினைவுகளை உயிர்த்தெழுப்பி
மழை நீராய் ஓட வைக்கிறது இப்போதும் !

11 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த நடுக்குகிற குளிரில்,
மழை வேறா...
சூப்பர்..

செ.சரவணக்குமார் said...

மழையில் நனைந்த உணர்வு நண்பா. மிகப் பிடித்திருக்கிறது.

Paleo God said...

கலக்குங்க..உதறுது..::))

'பரிவை' சே.குமார் said...

//இந்த மழையில் என்னுடன் நீ
ஒரே குடையின் கீழ் வந்தால்..
எப்படியிருக்கும்...//

சூப்பர்

Chitra said...

வெளியே மழை ...... மக்கள் மனதில் புயலாய் எண்ணங்கள்.
கவிதை அருமைங்க.

என் நடை பாதையில்(ராம்) said...

எனக்கு சளி புடிசிருசு போங்க...

திவ்யாஹரி said...

அழகான கவிதை..
மலை பெய்யும் போது வீதியில் கேட்கும் வசனங்கள் என்பதால்.. நேரில் பார்த்த உணர்வு வருகிறது..

"மழையில் என்னுடன் நீ
ஒரே குடையின் கீழ் வந்தால்.."

வருவதற்கு வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan said...

//இந்த மழையில் என்னுடன் நீ
ஒரே குடையின் கீழ் வந்தால்..
எப்படியிருக்கும்.. என்ற ஏக்கம்தான்
இன்னும் அதிகமாய்
உன் நினைவுகளை உயிர்த்தெழுப்பி
மழை நீராய் ஓட வைக்கிறது இப்போதும் !//

யார் அது ரிஷபன் ..??
:-)))))))))))

கமலேஷ் said...

ஒரு அழகான ஏக்கம் கவிதை ஆகி இருக்கிறது...வாழ்த்துக்கள்...

கே. பி. ஜனா... said...

கவிதை மழையில் நனைந்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவனவன் கவலை அவனவனுக்கு !

ஒரே குடையின் கீழ் உரசிச்செல்ல வேண்டுமாம் இவருக்கு !