January 29, 2010

காதலின் வர்ணஜாலம்


காதலின் வர்ணஜாலம்
எங்களையும் தீண்டி விட்டது..
அறியாமல் இருந்த
எங்கள் முகவரிகள் இப்போது
தலைகீழ் மனப்பாடம்!
பத்திலக்க எண்களில்
புத்தி பதிந்து போனது..
அலுவலகத்திலுங்கூட
டாலி ஆகாத கணக்கில்
உன் மொபைல் நம்பரைத்தான்
எழுதத் தோன்றுகிறது இப்போது..
'ஆன்' செய்யப்படாத மானிட்டரில்
உன் முகம் பிரதிபலிக்கிறது..
என் இரண்டு ஸ்பீக்கர்களும்'அவுட்' என்று
அழைத்தும் திரும்பாத எனக்கு
அடைமொழி கொடுத்துவிட்டார்கள் நட்பில்..
கீபோர்டில் டயல் செய்வதும்..
மௌஸைக் காதில் வைத்துக் கொள்வதுமாய்
என் எண்ணச் சிதறல்களில்
மீண்டும் மீண்டும் தெரிகிறது
நம் காதலின் வர்ணஜாலம்..




10 comments:

அண்ணாமலையான் said...

எனக்கு ஒரு டவுட்டு, ஏன் எல்லாரும் பேசற வாய விட்டுட்டு கேக்கற காத ஸ்பீக்கர்னு தப்பாவே சொல்றீங்க?

ஹேமா said...

ரிஷபன் உங்களைப் காதலின் பைத்தியம் என்று சொல்லவா ! ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மூக்கு கண்ணாடி என்று தான் சொல்கிறோம்.அதை ஏன் கண் கண்ணாடி என்று சொல்வதில்லை? அது போல் தான் காதை ஸ்பீக்கர்னு சொல்றதும்!!
(ரிஷபன் சார்பாக ஆர்.ஆர்.)

அகல்விளக்கு said...

காதலின் வீரியம் வரிகளில் தெரிகிறதே....

அண்ணாமலயான் அண்ணா

எனக்கும் அதே டவுட்.

காதுதான் மைக்....
வாய்தான் ஸ்பீக்கர்...

இது சரியா??

Paleo God said...

அப்படியா சங்கதி..:))

கவிதை நன்றாக இருக்கிறது.:)
----

@ மலை.. வசந்த் பக்கத்துக்கு போன பாதிப்பா..??::))

வசந்தமுல்லை said...

காதல் அனுபவம் பேசுகிறதோ? நல்ல அனுபவித்து எழுதி உள்ளீர்கள். யு ஆர் கிரேட்

செ.சரவணக்குமார் said...

//டாலி ஆகாத கணக்கில்
உன் மொபைல் நம்பரைத்தான்
எழுதத் தோன்றுகிறது இப்போது.. //

ரைட் நண்பா...

உங்க எழுத்து பிடிச்சிருக்கு.

நிலாமதி said...

வெற்றியடைய (காதல் வாழ்க்கை )என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்......
.....( இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நிற்பது தான் வாழ்க்கை )

மாதவராஜ் said...

//கீபோர்டில் டயல் செய்வதும்..
மௌஸைக் காதில் வைத்துக் கொள்வதுமாய்//

இதெல்லாம் செய்யாவிட்டால் என்ன காதல், பிறகென்ன கவிதை. ஹா...ஹா..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வயிற்றுக்குப் பசி வந்தால் பத்தும் ம(ப)றந்துபோகும்
காதலுக்கு பசி வந்தால் பத்து மட்டுமே நினைவில் இருக்கும்.