May 07, 2011

ஜ்வாலை

எல்லா மரங்களும்
இறுதியில் 
விறகுகள்தான்..
எல்லா மனிதர்களும்
அதே நெருப்பில்தான்..
இருக்கும் போது
உள்ளிருக்கும்
சுடரின் அளவு
வித்தியாசப்படலாம்..
இல்லாமல் போவதில்லை..
ஜ்வாலை மட்டும்
சிறிதாகவோ
பெரிதாகவோ..
தீயுடனான
தொடர்பற்றுப் போகும்
சாத்தியமற்ற
ஜீவன்களுக்கு
ஒவ்வொரு நாளும்
நிமிடமும்
கனன்று விழ வேண்டாமோ..
சுற்றி நிகழும்
அநீதி கண்டால்..

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஜ்வாலை மிக நன்றாகவே எரிகிறது, உங்கள் கையால் கவிதையாக ஏற்றப்பட்டதனால். பாராட்டுக்கள்.

பனித்துளி சங்கர் said...

நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் சுவாசிக்கிறேன் தங்களின் படைப்பை .

சுடுகிறது சிலவார்த்தைகள் கவிதையில் அழகான சிந்தனை . நன்றி நண்பா

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கனன்று விழ வேண்டாமோ..
சுற்றி நிகழும்
அநீதி கண்டால்..//



ஜ்வாலையின் சுடரில் அக்னி சாட்சியாக நல்ல சூடு உள்ளது. [voted]

vasu balaji said...

க்ளாஸ்:)

வெங்கட் நாகராஜ் said...

கவிதையிலே தெரிகிறது ஜ்வாலை…

எல் கே said...

அருமை ....

நிரூபன் said...

ஒவ்வோர் மனித உணர்வுகளுள்ளும் ஒரு நெருப்பு, பிரகாசமாய் எரிந்து கொண்டிருக்கிறது, நாங்கள் தான் சில நேரம் அநீதிகளைக் கண்டும், பேசாதவர்களாக இருக்கிறோம் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

middleclassmadhavi said...

//சுற்றி நிகழும்
அநீதி கண்டால்..//அக்னிக் குஞ்சொன்றை வைத்து விட்டீர்கள்!! அருமை!

RVS said...

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! ;-)))

நிலாமகள் said...

//உள்ளிருக்கும்
சுடரின் அளவு
வித்தியாசப்படலாம்..
இல்லாமல் போவதில்லை//

ஆமோதிக்கும் மனசுடன் தொடர்ந்து வாசிக்க, இறுதியில் அவரவர் சுடரில் தணல் கூட்டிப் போகிறது வரிகளின் வீர்யம். சபாஷ்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லா மரங்களும் விறகுகளாகலாம். எல்லாச் சொற்களும் கவிதைகளை உண்டாக்குவதில்லை ரிஷபன்.

பிரபாஷ்கரன் said...

அருமை நீங்கள் ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசன்தானே

ரிஷபன் said...

அட.. பிரபாஷ்கரன்.. எப்படி இருக்கீங்க..

வசந்தமுல்லை said...

too heat rishaban!!! Feeling the Heat!!

சமுத்ரா said...

அருமை

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சுடுகிறது...