June 19, 2011

பார்வை


’என் கிட்ட உனக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு’

வித்யா கேட்டதும் எனக்கு உடனே என்ன சொல்வதென்று புரியவில்லை.

‘எல்லாம்தான்’

‘லூசு.. குறிப்பா என்ன பிடிச்சிருக்கு’

‘இந்த மாதிரி உரிமையா திட்டறது’

’எதுக்குமே நேரடியா புரிஞ்சுகிட்டு பதில் சொல்ற புத்தியே உனக்குக் கிடையாதா’

‘சரி.. நீ சொல்லு.. என் கிட்ட உனக்கு என்ன பிடிச்சிருக்கு’

மடக்கப் பார்த்தேன்.

‘ஒண்ணே ஒண்ணுதான்.. நீ என் மேல வச்சிருக்கிறதா நான் நினைச்சுகிட்டு

இருக்கேனே.. அந்தப் பிரியம்’

‘ஏய்..’

’இப்ப நீ சொல்லு’

எதிரில் சாயம் போன சுடிதாரில் எந்த மேக்கப்புக்கும் முயற்சிக்காத

பெண்ணைப் பார்த்தேன்.

‘எவ்வளவோ சொல்லலாம்பா’

‘அதுல நெம்பர் ஒன் சொல்லு போதும்’

ம்ம்.. வேண்டுமென்றே யோசித்தேன். அவளை ஏற இறங்கப் பார்த்தேன்.

விரல்கள் நீளம். தலைமுடி குட்டையும் இல்லை.. ரொம்ப நீளமும் இல்லை.

கழுத்தில் ஒரு வசீகரம்.

‘சொல்லித் தொலை’ என்பது போல பொறுமையிழந்து பார்த்தாள்.

அந்தக் கண்கள்.

‘வித்யா.. சொல்லட்டுமா’

‘ம்ம்’

‘அப்புறம் கோவிச்சிக்கக் கூடாது..’

‘ஏன் எடக்கு மடக்கா ஏதாச்சும் சொல்லப் போறியா’

‘சேச்சே’

‘அப்புறம் என்ன.. சொல்லேன்.. ‘

‘முத முதல்ல உன்னைப் பார்த்தப்பவும் சரி.. இப்பவும் சரி.. உன்கிட்ட எனக்குப்

பிடிச்சது .. ‘

வித்யா இப்போது என்னையே உற்றுப் பார்த்தாள்.

‘உன்னையே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ஆனா உன் கிட்டன்னு குறிப்பா

சொன்னதால.. ‘

‘.....’

‘ உன் கண்கள் தான் வித்யா.. ‘

‘நிஜம்மா’

‘ம்.. ‘

சட்டென்று அவள் கண்களுக்குள் என் உருவம் குதித்து விழி நீரில் மிதந்து

நீச்சலடித்து எங்கோ தொலைந்து போனது.







24 comments:

எல் கே said...

:))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஏன் கண்கள்? கதை முடியாது தொடர்கிறதா? ஏதோ விடுபட்டது போல்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

Sir,
பார்வை நன்றாக சுவாரஸ்யமாகவே தெரிந்தது.

//சட்டென்று அவள் கண்களுக்குள் என் உருவம் குதித்து விழி நீரில் மிதந்து
நீச்சலடித்து எங்கோ தொலைந்து போனது.//

காதல் தோல்வியா?
அல்லது
ஆனந்தக்கண்ணீரா?

முடிவு முடிவில்லாமல் தொடர்வது போல உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Voted 3 to 4 in Indli &
1 to 2 in Tamilmanam

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பெண்ணின் கண்களில் ஒரு காந்தம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் ஆணின் அம்புப் பார்வையை ஈர்த்து இதயத்திற்குள் தைக்கவைக்கிறது.

ரசமான கதை.

கே. பி. ஜனா... said...

wonderful writing! ...ஊகிக்க வேண்டிய உண்மை ஏதாச்சும் அந்தக் கண்களில்?

பத்மநாபன் said...

கண் அவன் --- கண்கள் பிடித்த கணவன் கதை அருமை ---பெண்களுக்கான கவிதைகளில் அவர்களது விழிகள் பெரும் சதவீதம் எடுத்துக் கொள்ளும் ..

பிரபாஷ்கரன் said...

கண்கள்தானே ஆயிரம் கதை சொல்லும் அருமையான கதை

kowsy said...

இப்படி ஒரு நகைச்சுவை எப்போதோ வாசித்திருக்கின்றேன். காதலன் உடனே சொல்லுகின்றார். ‚'ஐயய்யோ அம்மா என்னிடம் முட்டை வாங்கி வரச் சொன்னார். மறந்துவி;டேனே'' என்று. இருந்தாலும் நீங்கள் வேறுமாதிரி சொல்லித் தப்பி விட்டீர்கள்

vasu balaji said...

இது எனக்கு நகைச்சுவையாகப் படவில்லை. சாயம் போன, மேக்கப்புக்கு முயற்சிக்காத, தலைப்பு பார்வை.ம்ம்ம். ரொம்ப நாளைக்கப்புறம் சொல்லத் தோண்றது. சபாஷ்:)

middleclassmadhavi said...

பெண்களுக்கு கண்களைப் பார்த்து பேசுபவர்கள் மேல் தான் மரியாதை வரும்; இதையும் சேர்த்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கதை வெகு ஜோர்..ஜில்லென்று ஒரு இளநீர் குடித்தது போல்....

நிரூபன் said...

காதல் ததும்பி வழியும் வண்ணம் அருமையான உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
பெண்களின் கண்களினைக் கயல் மீன் கண்களில் விழுந்தால், இலகுவில் எழுந்திருக்க முடியாதாம்.
அப்படியா ரிஷபன்;-)))

சிவகுமாரன் said...

அய். எனக்கு இன்னொரு காதல் வெண்பாவுக்கான கரு கிடைச்சாச்சு

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல கதை. புரிந்தும் புரியாமலும் முடித்திருப்பது அழகு. தொடர்பதிவுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன். முடிந்தால் வரவும் விவரங்கள் எனது பதிவில்.

ஹேமா said...

பார்வை ஆண்களிடமும் தான் !

அம்பாளடியாள் said...

சட்டென்று அவள் கண்களுக்குள் என் உருவம் குதித்து விழி நீரில் மிதந்து
நீச்சலடித்து எங்கோ தொலைந்து போனது.

ஆகா அசத்தலான வரிகள் வாழ்த்துக்கள்....
முதலில் தொலைந்ததைக் கண்டு பிடியுங்கள் சகோ!...

நிலாமகள் said...

என்ன‌ பிடிக்கும்? என்ற‌த‌ற்கு 'என்னைப் பிடிக்கும்' என்று சொல்ல‌ உண‌ர்வ‌ய‌ப்ப‌ட்ட‌ க‌ண்க‌ள் த‌ன் பிரிய‌த்தை க‌ண்ணீர் பெருக்கி காட்டிய‌தோ...! சுர‌ந்த‌ க‌ண்ணீரில் மித‌ந்தாலும் வ‌ழிய‌விடாது ம‌ன‌துள் தேக்கி வைக்கும் சூட்சும‌ம் நிறைந்த‌தாயிற்றே காத‌ல்!

kannan said...

திருக்குறளுக்கு அவரவர் தம் தமிழ் திறமைக்கேற்ப இன்றும் விளக்க உரை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றனர். வள்ளுவன் எதை நினைத்து எழுதினானோ, அது அவனிடம்தான் கேட்கவேண்டும். யார் என்ன சொன்னாலும் திருக்குறள் அருமையே...
அதுபோலவே, உமது இடுகைக்கு அவரவர் தத்தம் உணர்வுக்கு ஏற்ப விளக்கமும் விமர்சனமும் செய்துள்ளனர். நான் அதை உள்ளபடியே ரசிக்கிறேன். யார் என்ன சொன்னாலும், "அருமை" என்பது அனைவரது முடிவாகவும் இருக்கும். எனதும்தான்.....

கதம்ப உணர்வுகள் said...

நேர்மையான திண்மையான கம்பீரமான கண்களைப்பார்த்து பேசும் ஆண்களை பெண்கள் முழு மனதுடன் நம்புகின்றனர்...

இரட்டை அர்த்த ஜோக்குகள், வர்ணித்து எழுதும் கவிதைகள், வாய்ப்பு கிடைத்தால் உரசிப்பார்க்கும் அல்ப குணங்கள் இதெல்லாம் இல்லாது....

ரொம்ப பிடிச்சிருக்கு... என்னவென்று கேட்டால் கண்கள் என்று சொன்னது கவிதைக்கே அழகு சூட்டியது போன்றதாகிவிட்டது.....

நல்ல ரசனையுள்ள கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துகள் ரிஷபன்...

கதம்ப உணர்வுகள் said...

கடைசி வரிகள் அவனுக்கு கண்கள் பிடிச்சதுன்னு சொன்னதும் அவள் கண்களுக்குள் என் உருவம் குதித்து விழி நீரில் மிதந்து நீச்சலடித்து எங்கோ தொலைந்து போனதுன்னு சொன்னது எனக்கு என்ன தோணுதுன்னா....

பெருமையாக கர்வமாக நிம்மதியாக சந்தோஷமாக உணர்ந்து அது நட்பாகட்டும் காதலாகட்டும் அதில் ஒரு பண்பு இருப்பதை உணர்ந்து மன அமைதியுடன் கண்ணீர் தளும்புமுன் இமைகளை மூடி மறைக்க பார்த்திருப்பாளோ?

எப்படி என்றாலும் அந்த ஆண்மகனின் நேர்மையான மனதை பாராட்டியே தீரவேண்டும்....

Unknown said...

கேள்வியும் பதிலு மாக-கவிதை
கேட்கின்ற தன்மை யாக
நாள்தொரும் குழந்தை ஆக-காதல்
நலமிக நடந்து போக
தாள்தனில் அணிந்த தண்டை-ஒலி
தந்திடும் இன்பம் கொண்ட
ஆளுமை கவியில் கண்டேன்-இங்கே
அதனையே நானும் விண்டேன்

புலவர் சா இராமாநுசம்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை....

கிருஷ்ணப்ரியா said...

காதல் அழகு, அதிலும் எப்போதும் காதலர்களை கேள்வி கேட்கும் காதலிகள் ரொம்ப அழகு. அந்த காதலிகளை இப்படி பதில்களால் கிறங்கடிக்கும் காதலர்களோ...... கொள்ளை அழகு.....!

யுக யுகமாய் நடக்கும் விஷயம் தான், ஆனாலும் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் அழகு ரிஷபன்....

ADHI VENKAT said...

நன்றாக இருந்தது சார்.