June 04, 2012

பொழிகிறது..


கொட்டித் தீர்த்து விட்டது மழை.

இல்லை.. இன்னும் இருக்கிறது

என்கிறது வானிலை ..

ஒரு குடைக்குள்

அடங்காது

திமிரும் மனசு.

அப்படியே வானம்

கீழிறங்கும் அதிசயம்.

சள சளவென்று

நீரை உதைத்துப் போகையில்

உண்டாகும் குதூகலம் ..

இன்னொரு மழைக்காய்

காத்திருக்க  சொல்லும் !



28 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அநேககமாய் திருச்சியின் கத்தரி வெயில் தூண்டியிருக்கவேண்டும் ரிஷபன் மூலமாய் இந்த மழையை.

ரைட்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமையான கவிதை !

இந்த தகிக்கும் வெயிலுக்கு பொருத்தமான கவிதை இது!!

vasan said...

ரிஷப‌ன்,
இன்னும் நீட்டிக்கும் இந்த‌‌ அக்கினி கோடையின் ம‌திய‌த்தில்,
இந்த‌ க‌விதை அப்ப‌டியே சென்னை அண்ணாசாலையை ந‌னைக்க‌,
நாமும் அப்ப‌டி ந‌டக்க‌ க‌னாக் காண்கிற‌து வெம்பும் ம‌னசு.

KParthasarathi said...

மழை பொழியட்டும்
வானம் கிழியட்டும்
நிலம் நீரால் வழியட்டும்
வறட்சி விலகட்டும்
மக்கள் மனம் மகிழட்டும்
உங்கள் கவிதை வந்துகொண்டே இருக்கட்டும்

ராமலக்ஷ்மி said...

மழை போலவே பொழிந்திருக்கும் அழகிய கவிதை. இன்னொரு கவிதைக்காகக் காத்திருக்கவும் சொல்கிறது!

கே. பி. ஜனா... said...

//ஒரு குடைக்குள்
அடங்காது
திமிரும் மனசு.//
அதானே?

ஸ்ரீராம். said...

அந்த மழை இல்லையெனில் என்ன கவிதை மழை இருக்கே! சென்னையிலும் மழை வேண்டும். 108, 109 என்று கொதிக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

மழையே வந்துவிடும் இந்தக் கவிதையைப் படிக்க.

G.M Balasubramaniam said...

கோடை மழையும் அதற்காகக் காத்திருத்தலும் குதூகலம்தான்.

சாந்தி மாரியப்பன் said...

//சள சளவென்று
நீரை உதைத்துப் போகையில்
உண்டாகும் குதூகலம்//

சிறு வயது நினைவுகளைத் தூண்டுகிறது வரிகள்.. :-)

அருமையான குளுமையான கவிதை.

CS. Mohan Kumar said...

We want your special punch short stories ( Not that this poem is not likable. But you are a master in short stories and we want to see more ..)

இராஜராஜேஸ்வரி said...

ஒரு குடைக்குள்

அடங்காது

திமிரும் மனசு.இன்னொரு மழைக்காய்

காத்திருக்க சொல்லும் !

வெங்கட் நாகராஜ் said...

//சளசளவென்று
நீரை உதைத்துப் போகையில்....//

ஆஹா என்னவொரு அனுபவம் அது....

தில்லியில் இப்போது அடிக்கும் வெய்யிலுக்கு, இப்படி ஒரு மழை வந்தால் நிச்சயம் அனுபவிப்பேன்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு குடைக்குள்
அடங்காது
திமிரும் மனசு//

திமிருமா?

குடைகுடையெனக் குடைந்து எடுத்து விடும், குதூகுலத்தில் நம் மனசு! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சள சளவென்று
நீரை உதைத்துப் போகையில்
உண்டாகும் குதூகலம் ..//

தளதளவென்று தளிர் நடை போடும் குழந்தையைப் பார்த்தது போன்ற குதூகலம் தான்! ;)))))

நல்ல கவிதை. சந்தோஷம்.

manichudar blogspot.com said...

குதூகல மழைக்காய் காத்திருக்கும் மனசு , மழை கவிதை ஆறுதலாய் .

செய்தாலி said...

வெட்கையில்
புழுங்கும் மனதை நனைக்கிறது
கவிதை கவிஞரே ...

சென்னை பித்தன் said...

கவிதை மழையில் நனைந்தேன்
கொட்டித் தீர்தது மழை உங்கள் கவிதையில்
சொட்டுக்கூட இல்லை தருமமிகு சென்னையில்!

வசந்தமுல்லை said...

வெயிலை நினைத்து வாடுகையில் இப்படி ஒரு மழைக் கவிதை!!!
ஆஹா! ஆஹா! ஆஹா!
என்ன ஒரு அருமையான நடையில் இந்த மழைக் கவிதை!

arul said...

nice

கோவி said...

அடுத்த மழைக்கு காத்திருக்கிறேன்..

anbalagangomathi said...

ரிஷபன்...

முன்பு இதற்கு நான் இட்ட பதிவு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

நம்மால் மட்டுமே இதுபோன்ற செயல்கள் சாத்தியம். கடுமையான வெயில் சூழலில் கொட்டித் தீர்க்கும் மழை அற்புதமானது உங்கள் மனதைப் போலவே.

பொழியட்டும் எங்கும் ஈரம் பரவட்டும். குளிரட்டும் இந்தப் பூமியும் மனித மனங்களும் எப்போதுமாக.

Anonymous said...

நாட்டில் மழையில்லாத போது மனதில் மழை பெய்து ஈடுகட்டுகிறது. மிக நல்ல கவித் தொகுப்பு சகோதரா. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கிருஷ்ணப்ரியா said...

கவிதையைப் படிக்கும் போதே மழையில் நனைந்த சுகம் வாய்க்கிறது.....

கிருஷ்ணப்ரியா said...

கவிதையை வாசிக்கும் போதே மழையில் நனைகிறேன்..... சுகமான கவிதை....

கிருஷ்ணப்ரியா said...

கவிதையை வாசிக்கும் போதே மழையில் நனைகிறேன்.... சுகமான கவிதை....

நிலாமகள் said...

பொசுக்கும் வெயிலில் பொழியும் ம‌ழை அருமைதான்!

மோகன்ஜி said...

கவிதையில் மழை! படித்த என் மனசிலோ இன்னமும் தூவானம்!