February 24, 2013

ஜ்வல்யா



’என்னடா கண்ணா’
என் கவிழ்ந்த தலை
நிமிர்த்தி
மழலைக் குரலில்
கேட்கிறாள் ஜ்வல்யா..
என் அம்மா
உயிர்த்து விட்டாள் அப்போது.



என்னை எவ்வளவு பிடிக்கும்’
என்றேன்..
இரு கை விரித்து
‘இவ்ளோ’
என்கிறாள்
ஜ்வல்யா..
அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...

15 comments:

sury siva said...



// இரு கை விரித்து
‘இவ்ளோ’
என்கிறாள்
ஜ்வல்யா..
அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...//

வாவ் !!

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

இராஜராஜேஸ்வரி said...

ஜ்வல்யா..
அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...

மழலையின் மகிழ்ச்சி மொழிகள்

வானமே எல்லையோ..!

கோமதி அரசு said...

என்ன பெத்த அம்மா என்று குழந்தையை சிலர் கொஞ்சௌவதை பார்த்து இருக்கிறேன். கவிதையின் முதல் பத்தியில் அதைக் கண்டேன்

என்னை எவ்வளவு பிடிக்கும்’
என்றேன்..
இரு கை விரித்து
‘இவ்ளோ’
என்கிறாள்
ஜ்வல்யா..
அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...//

அடுத்த பத்தியில் விரிந்த வானம்
போல் ஜ்வல்யாவின் அனபு தெரிகிறது.

Geetha Sambasivam said...

அருமையான தலைப்பு. ஜ்வல்யா ஜொலிக்கிறாள். தலைப்பைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். :)

vimalanperali said...

ஆகாயத்தைஉம் அம்மாவையும் ஒரே நேரத்தில் கொண்டு வர குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.

நிலாமகள் said...

ஜ்வல்யா... பேரழகுப் பேரழகி!! புஷ்பப் பொழுதுகள்... ஜ்வல்யாவுடனான பொழுதுகள்... விளைகவிதைகள் ...!

manichudar blogspot.com said...

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ். அதுவும் மழலையின் அன்போ...........

உஷா அன்பரசு said...

// அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...// -அருமை!

நெய்வேலி பாரதிக்குமார் said...

// அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...// மிக அருமையான வரிகள் .. உங்கள் கவிதையில் தெரிகிறது வான் மண்டலமும், விண்மீன்களும்

Unknown said...

உங்களுக்கு ஜ்வல்யா, எனக்கு என் ஜனு - குழந்தைகள் இடம்பிடிக்கும் இந்தக் கவிதைகளும்தான் எத்தனை அழகாகிவிடுகிறது! ஜ்வல்யாவில் தாயை தரிசிக்கும் பாக்கியம், தவப் பலன்தான். வாழ்த்துக்கள் ரிஷபன் ஜி! :)

RAMA RAVI (RAMVI) said...

//என் அம்மா
உயிர்த்து விட்டாள் அப்போது. //

//அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...//

அருமை.

ADHI VENKAT said...

// அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...//

அழகான வரிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது என் ஆகாயம்...//

அசத்தலான வரிகள். பாராட்டுக்கள்.

அந்தப் பிஞ்சுக்கைகளின் விரிப்பினில் அனைத்துமே அடக்கம் தான். ;)

பூமகள் said...

எங்க வீட்டுல நடப்பதை யாரு உங்க கிட்ட சொன்னா?? ;-) கடைசி வரிகள் நச்..! :)

மாதேவி said...

மழலையின் கைகளில் அடங்கும் ஆகாயம் அருமை.