January 22, 2015

காற்றோடு கை குலுக்கல்

காற்றுடன் கை குலுக்கல்...

அப்படியே நேராய்
வருகிறது
பின் இட வலம் 
திரும்புகிறது..
பின்னுக்காகவே போகிறது..
தலைக்கு மேல் சுழன்று
கீழிறங்குகிறது.
இத்தனை வித்தைகளையும்
அனாயசமாய்க் காட்டி விட்டு
கண்ணெதிரே நிற்கிறது
சாதுவாய் காற்று..
எனக்கு மூச்சு வாங்க வைத்து விட்டு  !




ஒரு பெயர் வைக்கத்தான்
காற்றை அழைத்தேன்..
அதுவும் காத்திருந்தது
பொறுமையாய்..
இது வேணாம்.. அது வேணாம்
என்று நிராகரித்துக்
கொண்டிருக்கையில்
குழந்தைகளுடன்
விளையாடப் போய்விட்டது
காற்று !


காற்றின் கை மிக வலிமையாய்
இருக்குமென்று நினைத்தேன்..
இல்லை..
கை குலுக்கியபோது
மிக மிருதுவாய்..
பிரமித்து நிமிர்ந்தால்
அதன் கண்களில் கேலிப் புன்னகை !


11 comments:

நிலாமகள் said...

காற்றில்லாமல் நாமில்லை! கவிதையும் வெகு மென்மை.

KParthasarathi said...

காற்று கவிதை இதமாக இருந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கை குலுக்கியபோது
மிக மிருதுவாய்..//

:) தங்களுடன் கை குலுக்கியது போன்ற உணர்வு என்னுள் ....
இதைப் படித்ததும். :)

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவிதையின் வரிகள் அற்புதம்.. இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இதமாக...
ரசித்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே அருமை..... முகப்புத்தகத்திலும் ரசித்தேன்....

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ரசித்தேன்
நன்றி

காமாட்சி said...

மிருதுவான பூங்காற்று போலும். ரஸித்தேன் காற்றை. அன்புடன்

மோகன்ஜி said...

காற்றிலே கவிதை நெய்யும் வித்தகரே நலமா!

V Mawley said...

ஆ ஹா ..காற்றோடு கை குலுக்க ரொம்ப தைரியம் வேண்டும்.".லா.ச.ரா." போல..மிக அருமை ..ரசித்த்தேன்..

மாலி.